The thing inside of us that makes us go up is our attitude.
Oneindia.in - thatsTamil
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.

Oneindia.in - thatsTamil
  • நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா
    சென்னை: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது

  • தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு
    கொழும்பு: தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன்

  • வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்
    சென்னை: வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசு கடலில் எல்லைக்கோட்டை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 22

  • தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.. இலங்கையை எச்சரிக்க அன்புமணி வலியுறுத்தல்
    சென்னை: இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று

  • மாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம்
    சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து திமிர் தனமாக கேலி செய்த நடிகர் ராதா ரவி, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி தனது அகங்காரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து சமீபத்தில்தான் திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. இவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்

  • மீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு!
    டெல்லி: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில்

  • மிஸ்டர் சம்பத்! உங்களது தட்டில் "சோறா" அல்லது "வேறா" .. பாத்திமா பாபு 'பொளேர்'!
    சென்னை: தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு, உங்கள் தட்டில் இருப்பது சோறா? அல்லது வேறா என எழுப்பப்பட்ட கேள்வி மிகப் பொருத்தம் என சாடியுள்ளார். நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை 'பத்தினி

  • ட்ரம்பின் புதிய ஆணை... சிரியா, ஈரான் உள்ளிட்ட ஆறு நாட்டு குடிமக்களுக்கு தடை!
    வாஷிங்டன்(யு.எஸ்). அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அரசாணைக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த ஆணையின் படி சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் மற்றும் சூடான் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது முன்னதாக ஈராக் நாட்டினவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈராக் அதிபரும்,அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு

  • 700 பேரை நடுகடலில் சுட்டுக் கொன்ற சிங்கள கடற்படை.. இப்போது பலி பிரிட்ஜோ.. என்ன செய்யப் போகிறார் மோடி
    சென்னை: தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் அருகில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அப்போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சுட்டில்

  • 'வேண்டாம் ஹைட்ரோ கார்பன்'.... மத்திய பெட்ரோலிய அமைச்சரை மிரள வைத்த அமெரிக்க தமிழர்கள்!
    ஹூஸ்டன்(யு.எஸ்): ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமெரிக்கத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரோ இடம் தேர்வு செய்து கொடுத்தது தமிழக அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைநகரமாக விளங்கும் ஹூஸ்டன் நகருக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வருகை தந்துள்ளார். அங்குள்ள பெட்ரோலிய

  • இலங்கையின் நரவேட்டைக்கு பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்கட்டும்- மீனவர்கள் ஆவேசம்
    ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ

  • "மரணம் அழகானது- நிலையானது- இறுதியானது- நிரந்தரமானது" ஜெ. மரணத்தை ரசிக்கிறாரா நாஞ்சில் சம்பத்?
    சென்னை: நாள்தோறும் நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பதிவுகள் சர்ச்சைகளின் சங்கமமாக அமைந்துவிடுகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பான பதிவில் மரணம் அழகானது- இறுதியானது- நிலையானது என ரசித்துப் பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலக்கிய புலமையுடன் பேசுவதாக கருதி கொண்டு நாஞ்சில் சம்பத் வெளிப்படுத்தும் கருத்துகள் படு சர்ச்சையாக மாறிவிடுகின்றன. ஓபிஎஸ் அணியில் இருக்கும் பாத்திமா பாபு மற்றும்

  • ஜெ. சிகிச்சை அறிக்கைகளை ஏற்க முடியாது- நீதி விசாரணை தேவை: தீபா
    சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

  • ராமேஸ்வரம் பிரிட்சோ சுட்டுக் கொலை.. புதுக்கோட்டையில் ஸ்டிரைக்கில் குதித்த மீனவர்கள்!
    புதுக்கோட்டை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை

  • அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே ஒரு வாரமாக ஜெ.வுக்கு காய்ச்சல்.. ஏன் கண்டுகொள்ளவில்லை?
    டெல்லி: உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை

  • நேரம் சரியில்லை... ஜெ. இறந்து விட்டார்.. இந்திய மருத்துவ கவுன்சில் வினோத விளக்கம்!
    சென்னை: ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர்உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையும்,

  • மன்னார்குடி அடியாட்களை கூவத்தூரிலிருந்து ஓட ஓட விரட்டிய எஸ்.பி முத்தரசி.. விளைவு "வெயிட்டிங் லிஸ்ட்
    சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட மன்னார்குடி குண்டர்களை ஒட ஓட விரட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.பி முத்தரசி. இதனால் ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாகி தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பணியில் நேர்மையாக இருந்த முத்தரசி கடந்த 2000ம் ஆண்டு முதலே பல சோதனைகளை சந்தித்து வந்துள்ளார். தமிழக

  • ஜெ. உடல்நிலை பற்றிய அறிக்கையில் முக்கிய முரண்பாடு.. ஸ்டாலின் பேட்டி
    சென்னை: டெல்லி எய்ம்ஸ் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் முரணான தகவல்கள் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் கேட்டுக் கொண்டார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின்

  • பெட்ரோல், டீசல் விலை... இதெல்லாம் அடுக்குமா அரசுகளே!
    இன்றைய கச்சா எண்ணெய் விலைப்படி பெட்ரோல் லிட்டர் ரூ 23க்குத் தரலாம், அரசுகள் மனசு வைத்தால் அது தாராளமாக முடியும். ஆனால் மத்திய மாநில அரசுகளின் வரிகளாகவே ரூ 51 தண்டமாக அழுகிறோம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பெட்ரோலிய கொடுமை இது! ஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய்

  • மோசமான நிலையில்தான் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் - இந்திய மருத்துவ கவுன்சில்
    சென்னை: ஜெயலலிதா மோசமான நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கமளித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவரது நிலைமை மோசமாக